மனித உடலில் உள்ள உலோகங்கள்

உடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. மனித உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்துகொள்வோம்.
மனித உடலில் உள்ள உலோகங்கள்
Published on

1. கால்சியம் - பற்கள் மற்றும் எலும்புகளில் கால்சியம் ஹைட்ராக்ஸி அபடைட் எனும் சேர்மமாக இருக்கிறது. நரம்பு செல்களின் வளர்ச்சியிலும், கால்சியம் முக்கிய பங்காற்றுகின்றன.

2. மெக்னீசியம் - எலும்பு மற்றும் உடல் கட்டமைப்பிலும் மெக்னீசியம் முக்கியமானவையாக இருக்கின்றன. உடலில் நிகழும் பல்வேறு வேதிவினைகளை, மெக்னீசியம் அயனிகள் கட்டுப்படுத்துகின்றன.

3. சோடியம் - ரத்தம் மற்றும் செல் திரவங்களில் சோடியம் இருக்கின்றன. இவை, உடலின் கார-அமில மதிப்பையும், அழுத்த சமநிலையினையும் சீராக வைத் திருக்க உதவுகிறது.

4. பொட்டாசியம் - சோடியம் அயனிகளை போன்றே, பொட்டாசியம் அயனிகளும், செல் திரவங்களிலும், ரத்தத்திலும் இருக்கிறது. அமிலத் தன்மை மற்றும் அயனி அழுத்தத்தையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

5. இரும்புச் சத்து - இரும்பு அயனிகள், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு காரணமாக திகழ்கின்றன.

6. செம்பு (காப்பர்) - உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களிலும், உடல் உறுப்புகளின் முறையான செயல்பாட்டிற்கும் காப்பர் அவசியமான தனிமமாகும். மேலும், நோய் எதிர்ப்பு திறனை அளிப்பதிலும் முக்கிய பங்களிக்கிறது.

7. மாங்கனீசு - சில நொதிகளில் மாங்கனீசு அயனிகள் இருக்கின்றன. குறிப்பாக, கார்போஹைட்ரேட்டு, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்திலும் மாங்கனீசை கொண்ட நொதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

8. துத்தநாகம் - உடலில் இருக்கும் முக்கிய ஹார்மோன் களில் துத்தநாகம் உள்ளது. பல்வேறு உடற்செயல்களை நிகழ்த்துவதற்கும் துத்தநாகம் அயனிகளை கொண்ட நொதிகள் தேவைப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com