இறைச்சில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது

ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளையே அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். உறுப்பு எந்த மாதிரியான பலனை தருகிறது என பார்க்கலாம்.
இறைச்சில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது
Published on

கல்லீரல் : இது மல்டி விட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.

சிறு நீரகம் : மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இர்ண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.

மூளை : இது மிகவும் நுட்பமானதாக இருக்கும். சிக்கலுடைய உறுப்பு என்றாலும் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் நிரம்பியது.

உறுப்புகளில் மிகவும் அதிகப்படியான இரும்புச் சத்து கொண்டிருக்கிறது. தாவரங்களில் இருப்பதை விட உறுப்பு இறைச்சிகளில் அதிகமாக இருக்கிறது.

இறைச்சியின் சதைப்பகுதியை விட உறுப்புக்களை சாப்பிடுவதால் வயிறு விரைவில் நிரம்பிவிடுகிறது. அதோடு பசியும் உடனே எடுப்பதில்லை.

உறுப்பு இறைச்சிகளில் அதிக கொலைன் இருப்பதால் அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் தருகிறது.

உறுப்பு இறைச்சி சதைப்பகுதியைக் காட்டிலும் விலை மலிவானது. ஆரோக்கியமானதும் கூட. உங்களின் தசை வலிமையை அதிகப்படுத்தும்.

X

Maalai Malar
www.maalaimalar.com