நெய் வகைகளும்... அவற்றின் நன்மைகளும்...

நெய் பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது.
நெய் வகைகளும்... அவற்றின் நன்மைகளும்...
Published on

இன்றைக்கு இந்தியாவில் பெருமளவில் பாலுக்காக வளர்க்கப்படும் பசுக்கள் கலப்பின வகையை சேர்ந்தவை ஆகும். இவை அதிக அளவில் பால் தருவதால் வணிக ரீதியாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. இந்த பசுக்கள் தரும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஏ-1 வகை என்று அழைக்கப்படுகிறது. அதே வேளையில், பாரம்பரிய நாட்டு பசு இனங்கள் குறைவாகவே பால் தருகின்றன. இந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் ஏ-2 வகை என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஏ-2 வகை நெய் இன்றைக்கு உலகின் பல நாடுகளில் விரும்பி வாங்கப்படுகிறது. இதற்கு காரணம், நாட்டு பசுக்களின் நெய் பீட்டா-கேசின் என்ற புரதத்தை கொண்டுள்ளது. இது சாதாரண கலப்பின பசுக்கள் தரும் ஏ-1 வகை நெய்யை விட ருசியானது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஏ-2 வகை நெய்யில் உள்ள ஒருவித அமிலம் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது, குடலின் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும், இதில் வைட்டமின்-ஏ, டி, இ, கே மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இதனால், உடலை வலுப்படுத்தும். மேலும், உடலில் தோல் அழகை மெருகேற்றி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

ஏ-2 வகை நெய் என்பது உடலில் நோய்க்கு காரணமாக கருதப்படும் வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்தி குணப்படுத்தும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த நெய் பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com