

* அரிசி களைந்த இரண்டாவது நீரில் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு முதலியவற்றை வேகவைத்து எடுக்கும் போது அதன் அரிப்புத்தன்மை அறவே நீங்கி விடும்.
* ஒரு ஸ்பூன் சட்னியை ஒரு தட்டில் போட்டதும் அதிலிருந்து தண்ணீர் தனியே வரக்கூடாது. கெட்டியாக அப்படியே இருக்கவேண்டும். இதுவே சட்னியின் சரியான பதம்.
* வத்தக்குழம்பு செய்யும்போது கொதித்த பின்னர் கொஞ்சம் வெல்லம் போட்டால் சுவை அதிகரிக்கும்.
* உப்புமா செய்யும்போது கொஞ்சம் புளித்த தயிரைச் சேர்த்தால் உப்புமாவின் சுவையே அலாதிதான்.
* முருங்கை இலையைக் கொத்தாக எண்ணெய்யில் பொரித்து அத்துடன் வறுத்த மிளகு, சீரகம், பெருங்காயம் உப்பு சேர்த்து, மிக்சியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
* எலுமிச்சை சாதம் செய்யும்போது மாங்காயைத் துருவிச்சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
* அப்பத்துக்கு மாவு அரைக்கும் போது தேங்காய், வெல்லத்துடன் நான்கு துண்டு அன்னாசி பழம் அரைத்து அப்பம் செய்தால் ருசியுடன் இருக்கும்.
* வேகவைத்த கொண்டைக்கடலையுடன், வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்து செய்யும் சுண்டல் சுவை மிகுந்து இருக்கும்.
* ஆரஞ்சுத் தோல்களை நறுக்கி அவற்றை வற்றல் குழம்பு தாளித்துக்கொதிக்கும் போது மூன்று, நான்கு துண்டு போட்டுக்கொதிக்க விடவும். வற்றல் குழம்பு தனிச்சுவையோடு இருக்கும்.
* அப்பளம் பொரிக்கும் போது அதை நான்காக மடித்து வைத்துக்கொண்டால் சிறிது எண்ணெய்யிலேயே பொரித்து விடலாம்.
* தேன்குழல் செய்யும்போது உளுத்தம் பருப்பு வறுத்துப் போடுவதுடன், ஒரு டம்ளர் பச்சரிசியைச் சேர்த்து வறுத்து அரைத்தால் பிசுபிசுப்பாக இல்லாமல் நன்றாக பிழியலாம்.
* தேங்காய்ப் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு, அடுப்பிலிருந்து குழம்பை இறக்கும்போது தான் தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும். இல்லையெனில், தேங்காய் பால் திரிந்து குழம்பு வீணாகி விடும்.
* ரவை உப்புமா செய்யும்போது ரவையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசிறி வைத்து, பிறகு உப்புமா செய்தால் கட்டி தட்டாமல் உதிரி உதிரியாக வரும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்தோடு சிறிது கடலைப்பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
*சாம்பாருக்காக துவரம்பருப்பை வேகவைக்கும் போது அதில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வேகும். சாம்பாரின் சுவையும் நன்றாக இருக்கும்.
*பாகற்காய் குழம்பில் சில துண்டுகள் கேரட்டையும் சேர்த்து வேக விட்டால் ருசியும், சத்தும் கூடுவதோடு கசப்பும் குறையும்.
*வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.