

* பச்சரிசியை ஊறவைத்து தேங்காய் சேர்த்து அரைத்து பாலில் வேக வைத்து, பாயசம் செய்தால் ருசி அமோகமாக இருக்கும்.
* பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்து அடை தயார் செய்து சாப்பிடலாம். வாயு தொல்லை வராது.
* அவியல் செய்தவுடன் இறுதியில் தேங்காய் எண்ணெய்யுடன் தயிரும் சேர்த்து கலந்தால் சுவை அள்ளும்.
* எலுமிச்சம் பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும்போது, அத்துடன் ஒரு பெரிய துண்டு இஞ்சியையும் நறுக்கி சேர்த்தால் ஊறுகாய் மணமாக இருக்கும்.
* கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது, ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் சமயத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் நெய் மணமாக இருக்கும்.
* பீன்ஸ், கொத்தவரங்காய் வேகவைக்கும்போது ஆரம்பத்திலேயே உப்பு சேர்த்தால் வேக நிறைய நேரம் ஆகும். அதனால் கடைசியில் தான் உப்பு சேர்க்க வேண்டும்.
* வடை மாவில் கொஞ்சம் சாதத்தை சேர்த்து பிசைந்து வடை சுட்டால் எண்ணெய் குடிக்காது. மிருதுவான சுவையான வடையும் கிடைக்கும்.
* பால் பாயசம் செய்ய போகிறீர்களா? ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை அரைத்து சேர்த்து செய்யுங்கள். சுவையோ சுவை தான்.
* வாழைப்பூ நறுக்கும்போது கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டால் கையில் கறை படியாது.
* துவரம் பருப்பு வேக வைக்கும் போது, சிறிது வெந்தயம் சேர்த்து வேக வையுங்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் சாம்பார் ருசியாக இருக்கும்.
* ராஜ்மாவை நன்கு வேகவைத்து, தாளிக்கும் போது கடுகு, இஞ்சி, மிளகாயும் இறுதியில் எலுமிச்சை சாறும் சேர்த்தால் நல்ல சுவை கிடைக்கும்.
* சிறுதானிய மாவில் முறுக்கு செய்யும் போது, வறுத்த உளுந்தம் பருப்புடன் பொட்டுக்கடலையும் சேர்த்து அரைத்து செய்தால் முறுக்கு வாயில் போட்டவுடன் கரையும். சுவையும் ஓஹோ தான்.
* குழம்பு பொடி, ரசப்பொடி அரைக்கும் போது, காய்ந்த கறிவேப்பிலையையும் சேர்த்து அரையுங்கள்.