இது தெரிந்தால் போதும்! சமையலில் நீங்கள் தான் கில்லாடி... பயனுள்ள சமையல் டிப்ஸ்

புளிக்குழம்பு வகைகளில், சிறிது உருளைக்கிழங்கு சேர்த்தால், ருசியுடன் நிறமும் மேம்படும்.
இது தெரிந்தால் போதும்! சமையலில் நீங்கள் தான் கில்லாடி... பயனுள்ள சமையல் டிப்ஸ்
Published on

* சாதம் வடித்த பின்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

* காய்கறிகளை நறுக்கியதும் சிறிது மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு தூவி சில நிமிடங்கள் வைக்கவும். காய்கறிகள் நிறம் மங்காமல் இருக்கும். சிறிது உப்பும், எண்ணெய்யும் தூவி காய்கறிகளை வதக்கினால் சாறு வெளியேறாமல் மென்மையாக இருக்கும்.

* குழம்புகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அது குழம்பின் வாசனையையும் சுவையையும் அதிகரிக்கச் செய்யும்.

* கிரேவி தயார் செய்யும்போது சிறிது வெண்ணெய் சேர்த்து வேகவைத்து விடுங்கள். கிரேவி மென்மையும், அடர்த்தியும் பெறும்.

* சாதம், கஞ்சி போன்ற உணவுகளில் பாதாம், முந்திரி அல்லது பன்னீர் துண்டுகளை தூவி சாப்பிட கொடுக்கலாம். அவை உணவுக்கு சுவையும், நறுமணமும் சேர்க்கும்.

* புளிக்குழம்பு வகைகளில், சிறிது உருளைக்கிழங்கு சேர்த்தால், ருசியுடன் நிறமும் மேம்படும்.

* கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை வேகவைக்கும் முன்பு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

* மீன் வதக்கும் போது, மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மீன் மென்மையாகவும் வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

* சாதம், குழம்பு, வறுவல் போன்ற உணவுகளை உடனடியாக பரிமாறாமல் சில நிமிடங்கள் மூடி வைத்தால் நறுமணம் நீடிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com