Cooking Tips| பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

எந்த ஒரு பொரியல் செய்யும்போதும் அதில் சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Cooking Tips| பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
Published on

* கேழ்வரகு, கம்பு, கோதுமை தோசை செய்யும்போது அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்தால் மொறுமொறுப்புடன் இருக்கும்.

* தேங்காய் சட்னி செய்யும் போது அதில் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.

* சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* ரசகுல்லா அல்லது ரசமலாய் செய்யும்போது பால் உருண்டையை உள்ளங்கையில் வைத்து நன்கு தேய்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* எந்த ஒரு பொரியல் செய்யும்போதும் அதில் சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* எந்த காய்கறி வைத்து புளிக்குழம்பு செய்தாலும் அந்த காய்கறியை எண்ணெய்யில் நன்கு வதக்கிய பின்பு சேர்த்தால் காய்கறி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

* தோசை மாவு இல்லாத சமயத்தில் மிக்சி ஜாரில், தேவைக்கேற்ப அரிசி மாவு, கோதுமாவு சேர்த்து நீர் கலந்து அரைத்து எடுத்தால் உடனடி மாவு தயார் இதனுடன் கேரட், வெங்காயம், தக்காளி, பன்னீர், பீட்ரூட் சேர்த்தால் விதவிதமான தோசை தயார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com