உடல்நலத்திற்கு ஏற்ற அத்திக்காய் ஊறுகாய்

அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அத்திக்காய் ஊறுகாய்
Published on

தேவையான பொருட்கள்:

அத்திக்காய்- 1/4 கிலோ

காய்ந்த மிளகாய்-50 கிராம்

மிளகு, தனியா, மஞ்சள்- தலா 5 கிராம்

ஓமம், பெருங்காயம்- தலா 5 கிராம்

உப்பு - 20 கிராம்

செய்முறை:

அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதை ஓர் உலர்ந்த பாத்திரத்தில் இட்டு, அதன் வாயில் துணியைக் கட்டி ஒரு வாரம் வரை வெயிலில் வைத்திருந்து பின்னர் உபயோகிக்கவும்.

இந்த ஊறுகாயை உண்டு வர, நன்கு செரிமானம் ஏற்படும். பித்தம் தணியும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com