சத்தான டிபன் பச்சைப்பயறு தோசை

பச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காலையில் பச்சைப்பயறில் செய்த உணவை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது.
சத்தான டிபன் பச்சைப்பயறு தோசை
Published on

பச்சைப்பயறு - 250 கிராம்
புளுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பச்சைப்பயறு, புளுங்கல் அரிசி, உளுந்து ஆகியவற்றை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக ஊறியதும் மென்மையாக அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து மாவை மூன்று மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான பச்சைப்பயறு தோசை ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com