வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்...

உடலை நீருக்குள் மூழ்கவைப்பது குளிர்ச்சிக்கு வித்திடும்.
வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்...
Published on

1 அதிகபட்ச வெப்பத்தை தவிர்க்கவும்.

வெப்பநிலை அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலான கால கட்டங்களில் வெளியே நடமாடாதீர்கள். முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்.

2 பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துங்கள்

இலகுவான, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியில் செல்லும் போது சன் கிளாஸ், தொப்பி அல்லது குடை பயன்படுத்துங்கள்.

3 திரவங்களை தேர்ந்தெடுங்கள்

உடலில் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சை பானம், மோர் அல்லது இளநீர் அருந்துங்கள்.

4 கார்பனேட் பானங்களை தவிர்க்கவும்

மது, டீ, காபி மற்றும் உடலில் நீர்ச்சத்தை இழக்க செய்யும் கார்பனேட் பானங்கள் பருகுவதை தவிருங்கள்.

5 தண்ணீர் குடியுங்கள்

நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள். பயணம் செய்யும்போது தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

6 கடினமான வேலைகளை தவிர்க்கவும்

அதிகபட்ச வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வேலை அல்லது வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

7 நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரிக்காய் மற்றும் கீரை வகைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

8 வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள்

ஜன்னல், கதவுகளில் சூரிய ஒளியை தடுக்கும் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். அதேவேளையில் அறைக்குள் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் சூரிய ஒளியில் நேரடியாக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

* நிழலில் இருப்பது வெயிலை விட 10 டிகிரி வரை குளிர்ச்சியாக இருக்கும். மரங்கள் இயற்கையான குளிர்ச்சியை அளித்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும். அதனால் சாலையில் நிழலான பக்கத்தில் நடங்கள். மரத்தின் நிழலில் ஓய்வெடுங்கள்.

* வீட்டு தோட்ட வேலை, நடைப்பயிற்சி உள்ளிட்ட செயல்களை அதிகாலையில் அல்லது சூரியன் மறைந்த பிறகு செய்யுங்கள்.

* வியர்வை வெளிப்படும்போது உடல் வெப்பம் அந்த திரவத்தை நீராவியாக மாற்றும். அப்போது சருமத்தின் மேற்பரப்பில் இருந்து வெப்பத்தை அகற்றி உடலில் உள் வெப்பநிலையை குறைக்க உதவிடும். ஆனால் வியர்க்கும்போது திரவங்களையும், தாதுக்களையும் உடல் இழக்கும். எனவே தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தண்ணீர் பருகுவது நல்லது.

* உடலை நீருக்குள் மூழ்கவைப்பது குளிர்ச்சிக்கு வித்திடும். ஏரி, குளம், நீச்சல் குளம் போன்றவற்றில் நேரத்தை செலவிடலாம். நீச்சல் தெரிந்திருப்பது முக்கியமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com