

எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.
வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.
நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.
மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.
சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள். காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது. புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.
கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.
முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள இவற்றை பின்பற்றுவது மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.