மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!

தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதால் கோபம், எரிச்சல், சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகிறது.
மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!
Published on

மலச்சிக்கல், பொதுவான செரிமான பிரச்சனை ஆகும். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான முறை மலம் கழிப்பது, மலம் கெட்டியான, வறண்ட நிலையில் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

மலச்சிக்கல் பெரும்பாலும் அசவுகரியத்தையும், விரக்தியையும் ஏற்படுத்துகிறது. மலத்தை வெளியேற்ற முடியாத நிலையில், தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதால் கோபம், எரிச்சல், சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகிறது. ஆனால் சில எளிய உணவுமுறை மாற்றங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.

1 காலையில் சூடான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அருந்துவது குடல் இயக்கத்தை தூண்டும். ஜீரணத்தை மேம்படுத்தும்.

2 ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலத்தை மென்மையாக்கி வெளியேற்ற உதவும். பப்பாளி குடல் இயக்கத்தை தூண்டும்.

3 சியா விதை: நீரை உறிஞ்சி ஜெல்லி போன்று மாறி குடலில் நுழைந்து மலத்தை மென்மையாக மாற்றும்.

4 10-15 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலை குறைக்க உதவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com