வறுத்த கோழி... இதயத்திற்கு ஆபத்தா?

வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.
வறுத்த கோழி... இதயத்திற்கு ஆபத்தா?
Published on

கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் 'பிரைடு சிக்கனை' பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ 'பிரைடு சிக்கன்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

* இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.

* கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

* 'பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

* சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

எப்படி சாப்பிடலாம்?

கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு 'கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com