

மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்றாலும், மைக்ரோவ்வேவ்வில் தயாரிக்கப்படும் பாக்கார்ன்களில் அதிக அளவு கொழுப்பு அடங்கியுள்ளது. இந்த கொழுப்பு மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றததல்ல.
சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதினால், உடலின் செயல் திறன் குறைகிறது. இது மூளைக்கும் உகந்ததல்ல. எனவே அதிக அளவு சோடியம் கொண்ட உணவுகளை தவிர்க்கலாம்.
பிரைடு மற்றும் துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுதல் மூளைக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் உகந்ததல்ல.
சிலர் தினமும் அல்லது அடிக்கடி கூட சீஸ் மற்றும் வெண்ணெய் சாப்பிடுவார்கள். இதில் உள்ள கொழுப்புகள் மூளையை பாதிக்கும்.