நரம்பு தளர்ச்சியை போக்கும் சூன்ய வாயு முத்திரை

முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது. கடுமையான வாதநோய்கள், முடக்குவாதம், பேச்சு தடுமாற்றம் குறையும்.
நரம்பு தளர்ச்சியை போக்கும் சூன்ய வாயு முத்திரை
Published on

குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து இறுக்கத்தைப் போக்குவதன் மூலமும், கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுத் தசைகளைப் பலப்படுதுவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றன. மேலும் மேல் முதுகுத்தண்டைப் பலப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலியைப் போக்க உதவுகின்றது.

செய்முறை

பதுமாசனம், சுகாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் அமரவும். சுட்டும் விரல் மற்றும் நடு விரலை மடித்து உள்ளங்கையில், பெருவிரலின் கீழ் வைக்கவும். பெருவிரலை மடித்த விரல்கள் மீது மடித்து வைக்கவும்.

மோதிர விரல் மற்றும் சிறுவிரலை நீட்டியவாறு வைக்கவும். பொதுவாக சூன்ய வாயு முத்திரையில் 15 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. உடல் நல உபாதைகளுக்காக செய்வதாக இருந்தால் 45 நிமிடங்கள் வரை சூன்ய வாயு முத்திரையைப் பழகவும்.

பலன்கள்

தெளிவின்மை, பொறுமையின்மை, காரணமற்ற பயம், கூச்சம், தள்ளாடுவது போன்ற உணர்வு, கைநடுக்கம், தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியை போக்கும். ஆழ்ந்த தூக்கம் தரும். கடுமையான வாதநோய்கள், முடக்குவாதம், பேச்சு தடுமாற்றம் குறையும். தைராய்டு, சுரப்பி குறைபாட்டால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய், குரல் கரகரப்பு, தோல் மற்றும் கூந்தல் வறட்சி ஆகியவை சரியாகும். வயோதிகத்தில் எலும்புகள் வலுவின்மை, தேய்மானம், பலவீனம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com