ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை

தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
பிராண முத்திரை
பிராண முத்திரை
Published on

விரிப்பில் அமரவும். மோதிர விரல், சுண்டு விரல், மத்தியில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் காலை மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

இரவு படுக்கும் முன் படுக்கையில் அமர்ந்து இந்த பிராண முத்திரையை செய்யவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறைகள். ஆழ்மனதில் இன்று எனக்கு நன்றாக தூக்கம் வரும். எந்த கனவும், சிந்தனைகளும் வராது. நான் நன்கு தூங்குவேன் என்று பத்து முறைகள் சொல்லவும். அந்த உணர்வை உடல் முழுக்க பரவச் செய்யவும்.

தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

ஓம் என்று மூன்று முறை உச்சரித்து கண்களை மூடி படுக்கவும். உங்களது மூச்சு உள்ளே வருவது, வெளியே செல்வதில் மட்டும் கண்களை மூடி கவனிக்கவும். இதிலேயே ஆழ்ந்த நித்திரை கனவுகள் இல்லா தூக்கம் கைகூடும். 48 நாட்கள் விடாமல் இரவு இந்த மாதிரி செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

யோகக் கலைமாமணி

பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

X

Maalai Malar
www.maalaimalar.com