சத்தான கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது. இன்று ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்
Published on

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,

புதினா - கால் கைப்பிடி,

இஞ்சி - சிறிதளவு,

எலுமிச்சை - 1/2 பழம்,

உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.

செய்முறை:

எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் நன்றாக அரைத்து, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com