சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி

மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு மூங்கில் அரிசி நிவாரணம் அளிக்கும். இந்த அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி
Published on

மூங்கில் அரிசி - 150 கிராம்,
நொய் அரிசி - 150 கிராம்,
சீரகம் - அரைத் தேக்கரண்டி,
ஓமம் - அரைத் தேக்கரண்டி,
பூண்டு - 10 பல்,
சுக்கு - ஒரு துண்டு,
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.

* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும்.

* பூண்டு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும்.

* அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும், கட்டி வைத்துள்ள சுக்கு மூட்டையை அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.

* நன்றாக வெந்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.

* சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி ரெடி.

மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com