கடலைப்பருப்பு - அப்பள கூட்டு செய்வது எப்படி

சாதம், தயிர் சாதம், தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கடலைப்பருப்பு - அப்பளப்பூ கூட்டு.
கடலைப்பருப்பு - அப்பள கூட்டு செய்வது எப்படி
Published on

கடலைப்பருப்பு - 100 கிராம்,
அப்பளம் - 15,
தக்காளி - ஒன்று,
பெரிய வெங்காயம் - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
நறுக்கிய பூண்டு - ஸ்பூன்,
பாட்டி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பாட்டி மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

தேங்காய் துருவல் - கால் கப்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
கசகசா - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை:  

தக்காளி, பெரிய வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும்.

கடலைப்பருப்பை சுண்டலுக்கு வேகவைப்பது போல் குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் அரை டம்ளர் நீர் ஊற்றி பாட்டி மஞ்சள்தூள், உப்பு, பாட்டி மிளகாய்த்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

இரண்டு கொதி வந்ததும் வெந்த கடலைப்பருப்பை போட்டு, மேலும் ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அப்பளப்பூவைப் பொரித்து எடுத்து பருப்பு கூட்டில் சேர்த்து பரிமாறவும்.

இதை சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com