திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் நீராடும் உற்சவம் நிறைவு

ஆண்டாள் நீராடும் உற்சவம் கடந்த 7-ந்தேதியில் இருந்து நடந்து வருகிறது.ஆண்டாள் தாயாருக்கு கொலு, வெந்நீரால் அபிஷேகம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் நீராடும் உற்சவம் நிறைவு
Published on

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் நீராடும் உற்சவம் கடந்த 7-ந்தேதியில் இருந்து நடந்து வருகிறது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஆண்டாள் தாயார் கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி ராமச்சந்திரா தீர்த்த கட்டத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார்.

அங்குள்ள மண்டபத்தை அடைந்ததும் ஆண்டாள் தாயாருக்கு கொலு, வெந்நீரால் அபிஷேகம் நடந்தது. ஆண்டாள் தாயார் மாலை வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு மாலை ஆண்டாள் தாயார் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோதண்டராமசாமி கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து கோவிந்தராஜசாமி கோவிலுக்கு ஊர்வலமாகத் திரும்பினார். வழி நெடுக பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். இதோடு ஆண்டாள் நீராடும் உற்சவம் நிறைவடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com