திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா

சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுவாமி -அம்பாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
சுவாமி -அம்பாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
Published on

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, கேடயத்தில் எழுந்தருளி துர்க்கை அம்மன் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக முதல் சுற்றும், முருகப்பெருமான் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக இரண்டாவது சுற்றும், எமதர்மன் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக மூன்றாவது சுற்றும், தேரோடும் வீதி உள்ள பிரகாரம் வழியாக நான்காவது சுற்றும், ஐந்தாவதாக பஞ்ச பிரகாரம் சுற்றும் தெருக்களின் வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை 7 மணிக்கு விடையாற்றியும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com