கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்பவனி நடந்தபோது எடுத்தபடம்.
தேர்பவனி நடந்தபோது எடுத்தபடம்.
Published on

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடந்தது.

பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட தேர் புனிதம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ சமுதாய தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள், இறைமக்கள், கருங்கண்ணி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com