சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல், சிவப்பு கயிறு வைத்து பூஜை

உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல், சிவப்பு கயிறு வைத்து பூஜை
Published on

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்றதாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் உள்ள மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இந்தநிலையில் கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வெங்கக்கல் மற்றும் 2 சிவப்பு கயிறு ஆகியவை நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com