search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நான்கு மாசி வீதிகளில் 600 விளக்குகள்: மின்னொளியில் வலம் வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்
    X

    நான்கு மாசி வீதிகளில் 600 விளக்குகள்: மின்னொளியில் வலம் வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்

    • இந்தாண்டு புதுமையாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டு உள்ளது.
    • கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழாவையொட்டி கோவில் மற்றும் சுவாமி வீதி உலா வரும் மாசி வீதிகள் விழா கோலம் பூண்டு இருக்கும். அந்த வகையில் இந்தாண்டு புதுமையாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டு உள்ளது. அதில் கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது. அதிலும் அம்மன் சன்னதி கோபுரம் முழுவதும் மற்றும் பொற்றாமரை குளம் பகுதியிலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மின்விளக்குகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. இதனை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து பொற்றாமரை குளம் பகுதியில் அதிக அளவில் கூடியிருந்தனர்.

    இது தவிர விழாவில் 12 நாட்களும் மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். அதில் இரவு நேரத்தில் சுவாமி வீதி உலா வரும் போது தெருக்களில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்த குறையை போக்கும் வண்ணம் இந்தாண்டு புதுமையாக 4 மாசி வீதிகளில் அதிக வெளிச்சம் கொண்ட 600 ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டது. முதல் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் கற்பக விருட்சத்திலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர்.மழை பெய்தாலும் சுவாமியை காண பக்தர்கள் பெருமளவில் மாசி வீதிகளில் கூடி இருந்தனர். அவர்கள் மின்விளக்கு ஒளியில் சுவாமி வீதி உலா வந்த அழகை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பக்தர்கள் கூறும் போது, மின்விளக்கு ஒளியில் சுவாமி வீதி உலா காட்சி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், சுவாமியை தெளிவாக காணும் வகையில் இருந்ததாகவும் பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    Next Story
    ×