மடப்புரம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா

பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள். இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி வழிபடுகின்றனர்.
மடப்புரம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா
Published on

மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com