கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 6 மணிக்கு விளாபூஜையும், 7 மணிக்கு செண்பகவல்லி அம்மன், பூவனநாதர், பலிபீடங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, கொடி ஏற்று விழா விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாநாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வரும் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.25 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், இதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைபிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com