search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    களியங்காடு சிவன் கோவிலில் சிவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
    X

    களியங்காடு சிவன் கோவிலில் சிவராத்திரி விழா நாளை தொடங்குகிறது

    • விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு சிவபுரத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக விழா மற்றும் மகா சிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மண்டலாபிஷேக விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு மூலமூர்த்திகள் அனைவருக்கும் அஷ்டாபிஷேகம், 11.30 மணிக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.40 மணிக்கு சிவபுராணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    17-ந் தேதி சிவராத்திரி விழா நிகழ்ச்சியாக அதிகாலை 5.30 மணிக்கு கணபதிஹோமம், 6 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7.10 மணிக்கு திருவாசக முற்றோதுதல், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு திருவாசக சபை தலைவர் சின்னையன் தலைமையில் 1008 திருவிளக்கு பூஜை, 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பரிசு வழங்கல், 8.30 மணிக்கு தீபாராதனை, 8.40 மணிக்கு சிவபுராணம் பாராயணம் ஆகியவை நடக்கிறது.

    18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு அகண்ட நாம ஜெபம் தொடக்கம், 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அகண்ட நாம ஜெபம் நிறைவு, தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 5.30 மணிக்கு சனி மகாபிரதோஷ அபிஷேகம், 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சாமபூஜை தொடக்கம், அதிகாலை 4.30 மணிக்கு வாண வேடிக்கை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன் தலைமையில் துணைத்தலைவர் முருகன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் நாராயணன் நாயர், துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், இசக்கிமுத்து, ராஜகோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×