சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது

ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Published on

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வந்தது.

3-வது நாளான நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திர மூர்த்தி, ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை ஊஞ்சல் சேவை, பல்லக்குகளில் வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com