ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.
அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.
Published on

இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com