நாளைக்கு சீன் இதுதான்.. நாங்க 450 அடிப்போம்.. இந்தியா 65-க்கு ஆல் அவுட் ஆகிடும்.. மிட்செல் மார்ஷ் கணிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.
நாளைக்கு சீன் இதுதான்.. நாங்க 450 அடிப்போம்.. இந்தியா 65-க்கு  ஆல் அவுட் ஆகிடும்.. மிட்செல் மார்ஷ் கணிப்பு
Published on

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com