search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பேட்டிங்கில் கூடுதல் ரன்கள் எடுத்திருக்கலாம்- தோல்வி குறித்து எம்எஸ் டோனி விளக்கம்
    X

    பேட்டிங்கில் கூடுதல் ரன்கள் எடுத்திருக்கலாம்- தோல்வி குறித்து எம்எஸ் டோனி விளக்கம்

    • பனிப்பொழிவு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
    • நோ பால் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

    16-வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றிபெற்றது.

    போட்டிக்கு பின் தோல்விக்கான காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    பனிப்பொழிவு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் இன்னும் ரன்கள் எடுத்திருக்கலாம். ருதுராஜ் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் பந்தை மிகவும் சிறப்பாக அடிக்கிறார். அவர் விளையாட்டை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர் பந்தை அடிக்கதயாராவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இளம் வீரர்கள் களத்தில் இறங்குவது மிகவும் முக்கியம்.

    ஹங்கர்ஹர் பந்துவீச்சில் வேகம் உள்ளது. பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்படுவார்கள். நோ பால் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகையால் அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 2 இடதுகை பேட்ஸ்மென்கள் சிறந்த தேர்வு தான். சிவம் துபே கூடுதல் தேர்வு. ஆனால், ஒட்டுமொத்தமாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள் நான் அவர்களுடன் விளையாடும்போது சவுகரியமாக உள்ளது.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×