மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை

விஜய்யுடனும், அஜித்துடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Vijay #Ajith
மீண்டும் நடிப்பில் களமிறங்கும் விஜய், அஜித் பட நடிகை
Published on

‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com