காக்கி சட்டை அணியும் உதயநிதி ஸ்டாலின்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி தனது அடுத்த படத்தில் காக்கி சட்டை அணிந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காக்கி சட்டை அணியும் உதயநிதி ஸ்டாலின்
Published on

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ல் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை' படத்தை இயக்கிவரும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரி இரண்டாம் பாகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் உதயநிதி, போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்காக காக்கிச்சட்டை அணியவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தொடக்கத்தில் காமெடி படத்தில் நடித்து வந்த உதயநிதி `மனிதன்' படத்தில் வழக்கறிஞராக நடித்தார். இந்த படம் உதயநிதிக்கு பேசும் படமாக அமைந்தது. அதேபோல் `நிமிர்', உதயநிதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உதயநிதி முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com