18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்துடன் திரிஷா இணைந்து நடிப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகிய நிலையில், 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிக்கின்றனர். #Rajinikanth165 #Trisha
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
Published on

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை திரிஷாவும் படக்குழுவில் இணைந்திருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ரஜினியுடன் மட்டும் இணையாத, நடிகை திரிஷாவின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. நாயகியாக அறிமுகமாகிய 16 வருடங்களுக்கு பிறகு திரிஷா, ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

அதேநேரத்தில் 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனும், திரிஷாவும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா, பிரசாந்த் நடித்த ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் பிரஷாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். சிம்ரனின் தோழியாக திரிஷா வருவார். அந்த படத்திற்கு பிறகு, மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரிஷா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth165 #Trisha #Simran

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com