யுவன், சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு

சிம்பு பாடிய பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால், அதற்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் யுவன் மற்றும் படத்தின் நாயகன் சிரிஷை அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
யுவன், சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு
Published on

`ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 'மெட்ரோ' புகழ் சிரிஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யூடியூப்பில் ரசிக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

பாடல் ஹிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு. அடுத்த ஹிட்டுக்கு ஆயத்தமாகி விட்டார் மெட்ரோ சிரிஷ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com