அடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
அடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினிகாந்த், அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார். 

அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #VijaySethupathi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com