ராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்

`ஜாக்சன் துரை' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் சிரிஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீசரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நாளை வெளியிடுகிறார். #RajaRanguski
ராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்
Published on

`ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 

'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். 

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கிறது. இந்த டீசரை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நாளை மாலை 4.30 மணிக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சிம்பு பாடிய `நா யாருன்னு தெரியுமா' பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #RajaRanguski 

X

Maalai Malar
www.maalaimalar.com