இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

எனோலா ஹோம்ஸ் 3 (Enola Holmes 3)

'எனோலா ஹோம்ஸ் 3' (Enola Holmes 3) திரைப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. மில்லி பாபி பிரவுன், ஹென்றி காவில் மற்றும் லூயிஸ் பார்ட்ரிட்ஜ் நடிப்பில், இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கண்டு களிக்கலாம்.

Elle : From the world of Legally Blonde

உலகளவில் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.

சூப்பர் சுப்பு

மாலிக் ராம் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி இணையத் தொடர் சூப்பர் சுப்பு. கிராமத்து பின்னணியில் வாழும் சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் என்ற அப்பாவி இளைஞனுக்கு, எதிர்பாராத விதமாக செக்ஸ் எஜூகேஷன் (பாலியல் கல்வி) ஆசிரியராக வேலை கிடைக்கிறது. பழமைவாத கிராம மக்களிடையே அவர் சந்திக்கும் நகைச்சுவையான சவால்களே இத்தொடரின் கதை. சந்தீப்புடன் மிதிலா பல்கர், முரளி சர்மா, கெட்அப் சீனு, பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்தொடர் நாளை மறுநாள் முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இத்தொடர், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கண்டு மகிழலாம்.

இசகப்பட்டினம் (Isakapatnam)

'இசகப்பட்டினம்' (Isakapatnam) திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நாளை மறுநாள் வெளியாகிறது. சமுத்திரக்கனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த தெலுங்கு அதிரடி திரில்லர் திரைப்படம் ஜூலை மாதத்தின் முக்கிய ஓடிடி ரிலீஸாகக் கருதப்படுகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

Hangman (ஹேங்மேன்)

ஹேங்மேன் (Hangman) வியூஹான் இயக்கத்தில், பிரம்மாஜி, வினய் நல்லகாடி மற்றும் பலர் நடித்துள்ள புதிய தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com