இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

Brothers And Sisters:

'Brothers and Sisters' நாளை முதல் JioHotstar-ல் வெளியாகும் ஒரு புதிய குடும்பத் தொடர் ஆகும். பொன்மலர் குடும்பத்தை மையமாகக் கொண்ட இந்த தொடரில், போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை பின்னணியில், பொன்மலர் குடும்பத்தில் உள்ள நான்கு சகோர, சகோதரிகளின் வாழ்க்கையைச் சுற்றி இந்த நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகம் நகர்கிறது. இந்தத் தொடரை சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.

கர:

போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘கர’. இந்தப் படத்தின் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் கே. எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் இந்த கதை நகர்கிறது. திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு நேர்மையாக வாழ நினைக்கும் நாயகன், வங்கி ஜப்தி நடவடிக்கை காரணமாகத் தன் தந்தையின் உடலைச் சொந்த நிலத்தில் புதைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் ஏற்படும் அதிருப்தியில், அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க அவர் திட்டமிடுவதை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லராக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கர’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘கர’ திரைப்படம் நாளை மறுநாள் முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

லீடர்:

எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் ‘லீடர்’. முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படம் ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற 29-ந்தேதி முதல் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.

Cousins And Kalyanams:

'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' தொடரை விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ளனர். இது ஒரு கலகலப்பான பொழுதுபோக்குத் தொடராகும். இந்த தொடர் வருகிற 29-ந்தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகத் தொடங்கும். இந்தத் தொடரில் 60 எபிசோடுகள் உள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு புதிய எபிசோடுகள் வெளியாகும், இது பார்வையாளர்கள் கதையை வாரம் வாரம் பின்தொடர வழிவகுக்கும். இந்த தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Faces:

நீலேஷ் இகே இயக்கிய 'ஃபேசஸ்' ஒரு மலையாள காதல் உளவியல் திரில்லர் திரைப்படமாகும். இது, ஒரு துயரமான எரிவாயு வெடிப்பு மற்றும் தனது காதலன் மைக்கேல் காணாமல் போனதைத் தொடர்ந்து கடுமையான PTSD-ஆல் பாதிக்கப்பட்ட நித்யாவின் கதையைப் பின்தொடர்கிறது.

மன அதிர்ச்சியாலும் நினைவாற்றல் இழப்பாலும் பீடிக்கப்பட்ட அவள், தான் சந்திக்கும் ஒவ்வொரு அந்நியரிடமும் மைக்கேலின் முகத்தைக் காணத் தொடங்குகிறாள். அவன் காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மையை அவள் தேட முயலும்போது, ​​அவளுடைய மனநிலை யதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்து, பதற்றமும் பரபரப்பும் நிறைந்த தருணங்களை உருவாக்குகிறது. இப்படம் வருகிற 29-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com