வேளாண்துறை, தொழில்துறையாக மாறினால் தான் அனைவரும் வாழ முடியும்: கமல்ஹாசன் பேச்சு

வேளாண்துறையை தொழில்துறையாக மாற்றினால் தான் இங்கு அனைவரும் வாழ முடியும் என்று சென்னையில் விவாசயிகள் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
வேளாண்துறை, தொழில்துறையாக மாறினால் தான் அனைவரும் வாழ முடியும்: கமல்ஹாசன் பேச்சு
Published on

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் முன்பு கமல்ஹாசன் பேசிய போது,

விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தணையின்றி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாதரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியதாக கமல் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லால், ஏரி, குளங்களை செப்பனிட ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், ரசிகர்கள் குழு குழுவாக பிரிந்து விரைவில் விவசாயிகளை சந்திக்க இருப்பதாகவும், ரசிகர்களுடன் சேர்ந்து பணியாற்ற வாருங்கள் என்று விவசாயிகளுக்கு கமல் அழைப்பு விடுத்தார்.

மேலும் பேசிய அவர், வேளாண்துறையை தொழில்துறையா மாற்றினால் தான் அனைவரும் வாழ முடியும். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமைகளையும், அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் கேட்டு வளர்ந்தவன் நான். விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக தான் இங்கு வரவில்லை, உங்களை கோபப்படுத்தி களத்தில் இறங்க வைக்கவே வந்துள்ளேன் என்றும் கூறினார்.

முன்னேற்றம் என்ற பெரில் இயற்கையை சூறையாடுவது நாட்டையே பாதிக்கும். அதனை நாம் அனுமதிக்க கூடாது. டெல்லியில் இருந்து ஒருவர் என்னை பொறுக்கி என்கிறார். நான் பொறுக்கி தான். அறிவு, சிந்தனை வரும் போது தான், நான் ஒரு பொறுக்கி என்பதை உணருகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com