இனி விதைப்பது நற்பயிராகட்டும் - கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

நாளை உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். #KamalHaasan #Pongal2018 #Pongal
இனி விதைப்பது நற்பயிராகட்டும் - கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
Published on

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. 

முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய எண்ணங்களை தீயில் இட்டு, புதிய எண்ணங்களை மனதில் வளர்ப்பதே போகி பண்டிகையாகும். அதனைத் தொடர்ந்து நாளை பொங்கல் திருநாளும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப் பொங்கல், கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது டுவிட்டர் வாழ்த்து பின்வருமாறு,

`அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு' என்று குறிப்பிட்டிருக்கிறார்.  #KamalHaasan #Pongal2018 #Pongal 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com