

சூர்யா மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள சமீபத்திய ஃபேண்டஸி ஆக்ஷன் டிராமா படமான 'கருப்பு', அதன் ஆரம்ப வெளியீட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்த பெரிய தடைகளை வெற்றிகரமாகக் கடந்து, பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்தப் படம், வெளியான முதல் வார இறுதியில் உலகளவில் ₹147 கோடியைக் கடந்த நிலையில் படக்குழுவினர் தங்களின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் தனது அலுவலகத்தில் நேரில் வைத்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
படத்தின் பிரமாண்டமான வணிக வெற்றிக்காக முதலமைச்சரிடமிருந்து அங்கீகார வாழ்த்துகளைப் பெற்றதையடுத்து, படக்குழுவினர் தங்களின் உற்சாகத்தையும் நன்றியையும் X தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு (Special Show) அனுமதி வழங்கியதற்காக, தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த 'கருப்பு' படக்குழுவினரும் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது நன்றியைக் தெரிவித்துக் கொண்டனர்.