Youth | உலகளவில் ரூ. 82 கோடிக்கும் அதிக வசூலித்த "யூத்"

யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
Youth | உலகளவில் ரூ. 82 கோடிக்கும் அதிக வசூலித்த "யூத்"
Published on

`அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பை கடந்து கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில், பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்தனர். இந்தப் படத்தில் தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பள்ளிக்கூட பின்னணியில் உருவான இந்தப் படம் உலகளவில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவான நிலையில், இந்தப் படம் வர்த்தக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com