ரூ.50 கோடி வசூலைத் தாண்டிய ‘யூத்’!

நடிகர் கென் கருணாஸின் யூத் திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
ரூ.50 கோடி வசூலைத் தாண்டிய   ‘யூத்’!
Published on

அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற திரைப்படங்களில் நடிகராகவும், தனுஷிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவர் கென் கருணாஸ். தற்போது யூத் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா அனில்குமார், சூரஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, பிரியன்ஷி யாதவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை, கல்லூரியின்போது ஏற்படும் காதல், நட்பு போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி வெளியான இப்படம் தற்போதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com