ஜூனில் வெளியாகும் யோகிபாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’

இப்படத்திற்கு பிரதீப் காலிராஜா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.
ஜூனில் வெளியாகும் யோகிபாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’
Published on

இயக்குநர் அமீரின் ‘யோகி’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு. இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் 300-வது திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

இப்படத்திற்கு பிரதீப் காலிராஜா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இப்படத்தை தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்க பாண்டி தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

இதனிடையே, ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com