

கடந்த ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கிய 'ஓஹோ எந்தன் பேபி' என்ற காதல் பொழுதுபோக்குத் திரைப்படத்தின் மூலம் தனது சகோதரர் ருத்ராவைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் .
தற்போது ருத்ரா , 'Yellow Yellow Dirty Fellow' என்ற தனது இரண்டாவது படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், சஞ்சய் அர்ஜுன் தாஸ் வத்வாவுடன் இணைந்து தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
மற்றுமொரு காதல் பொழுதுபோக்குத் திரைப்படம் வரவிருப்பதை உணர்த்தும் வகையில், படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று வெளியிட்டார். விக்கி பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். அவர் சமீபத்தில் ரத்ன குமாரின் ‘29’ படத்தில் ரெட்ரோ புகழ் விதுவுடன் நடித்து இருந்தார்.
இந்த நிலையில், 'Yellow Yellow Dirty Fellow' படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.