யாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள்

டாக்ஸிக் திரைப்படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
யாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள்
Published on

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2 படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் பர்த்டே பீக் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் நடிகர் யாஷ் பப் ஒன்றுக்கு சென்று பியானோ வாசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கே.ஜி.எஃப். போன்றே இந்தப் படத்திலும் யாஷ் தோற்றம் கோட், சூட் அணிந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com