'கருப்பு' படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் எவை?

இப்படம் டிசம்பர் மாதத்திலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கருப்பு' படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் எவை?
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ந்தேதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த கமர்ஷியல் கம்பேக் படமாக அமைந்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆ.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி நடைப்போடுகிறது. உலகம் முழுவதும் வெளியான ‘கருப்பு’ படம் இதுவரை ரூ.147 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. இனிவரும் நாட்களில் ‘கருப்பு’ வசூல் வேட்டையில் ஈடுபடும் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதனை தொடர்ந்துவெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் ‘Suriya 47’ திரைப்படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ஒரு அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதத்திலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com