எதிர்காலத்தில் எப்படி காதலிப்பார்கள்? வெளியானது பிரதீப் ரங்கநாதனின் LIK டிரெய்லர்

முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
எதிர்காலத்தில் எப்படி காதலிப்பார்கள்? வெளியானது பிரதீப் ரங்கநாதனின் LIK டிரெய்லர்
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி).

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து படம் வெளியாவது குறித்த அறிவிப்புகள் வெளியானாலும் படம் வெளியாகவில்லை.

கடைசியாக 'LIK' படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், LIK படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. டிரெய்லர் மூலம் படம் அறிவியல் புனைகதை பாணியில் அமைந்திருப்பது தெரிகிறது.

இளம் தலைமுறையினருக்கு ஏற்ற சப்ஜெட்டாக இருப்பதால் பிரதீப் ரங்கநாதனின் இந்த படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com