சமூக வலைதளங்களில் இருந்து விஷ்ணு விஷால் திடீர் விலகல்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
Published on

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆர்யன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விஷ்ணு விஷால் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சமூக ஊடகங்களிலிருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இரண்டு வானம், கட்டாகுஸ்தி 2 ஆகிய படங்களின் அப்டேட்களுடன் விரைவில் திரும்புவேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com